தொழில்நுட்பம்
ஒப்போ ரெனோ

இந்தியாவில் தொடங்கியது ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் விற்பனை

Published On 2019-09-08 05:24 GMT   |   Update On 2019-09-08 05:24 GMT
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அம்சங்களைக் கொண்ட ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.

ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் நேற்று அதன் இந்திய விற்பனையை தொடங்கியது.  இந்த ஸ்மார்ட்போன் பிரபல ஆன்லைன் தளங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் வகையில், இந்தியாவில் விற்பனையை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல், ரூ.29,990 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது லுமினஸ் பிளாக், ஸ்கை வைட் மற்றும் போலார் லைட் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன், பஜாஜ் பின்சர்வ் ஈஎம்ஐ-களுக்கு ஜீரோ டவுன் பேமென்ட், எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளின் வழியிலான ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு 5 சதவீதம் கேஷ்பேக், ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 198 மற்றும் ரூ. 299 திட்டங்கள் கிடைக்கும்.

மேலும் வோடாபோன் - ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,750 மதிப்பிலான கேஷ்பேக் மற்றும் 250 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா, ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.249 ரீசார்ஜ் திட்டம், எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடி, ரூ.3,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் மதிப்பு ஆகியவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



ஒப்போ ரெனோ 2இசட் ஆனது 6.53 இன்ச் அளவிலான (1,080 x 2,340 பிக்சல்கள்) அமோல்டு டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அது 19.5: 9 என்கிற அளவிலான திரை விகிதம், 91.6 சதவீதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை அதன் முன் மற்றும் பின்புறத்தில் கொண்டுள்ளது.

8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 அளவிலான உள்ளடக்க சேமிப்பகத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ பி 90 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 2இசட் ஆனது ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது, இது VOOC 3.0 ப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

கேமராவை பொறுத்தவரை,  48 மெகாபிக்சல் அளவிலான சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார்,  8 மெகாபிக்சல் அளவிலான வைட் ஆங்கிள் லென்ஸ் (119 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ), 2 மெகாபிக்சல் அளவிலான மோனோக்ரோம் சென்சார் ஆகியவைகளை உள்ளடக்கிய மூன்று பின்பக்க கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பீ கேமரா உள்ளது. ஒப்போ ரெனோ 2இசட்டின் கேமரா அம்சங்களில் அல்ட்ரா டார்க் மோட், அல்ட்ரா ஸ்டெடி மோட், ஏஐ பியூட்டி மோட் மற்றும் ஆம்பியண்ட் லைட் மோட் ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன. அங்கீகாரத்திற்காக இது ஆப்டிகல் ஜி3 இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரை கொண்டுள்ளது.
Tags:    

Similar News