செய்திகள்
கோப்புப்படம்.

மதிப்பு கூட்டு ஆடை வர்த்தகம் அதிகரிப்பு- பின்னலாடை நிறுவனங்களுக்கு மாநில வளர்ச்சிக்குழு வேண்டுகோள்

Published On 2021-07-18 07:56 GMT   |   Update On 2021-07-18 07:56 GMT
அதிக திறனுள்ள நூற்பாலைகள், ‘நிட்டிங்’ துறைகளை திருப்பூர் பின்னலாடைத்துறை கொண்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், இணைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் சென்னையில் முகாமிட்டு அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து பின்னலாடை தொழில் துறையின் தேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இது தொடர்பாக  ராஜாசண்முகம்  கூறுகையில், தமிழக தொழில்துறை, ஜவுளித்துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்தது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மாநில கொள்கை வளர்ச்சிக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் விஜயபாஸ்கர், சிவராமன் உள்ளிட்டோரை சந்தித்து திருப்பூரை போன்ற பின்னலாடை உற்பத்தி நகரங்களை தமிழகம் முழுவதும் உருவாக்கவேண்டும். இந்த தொழில் வேறு மாநிலங்களுக்கு நகர்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

திட்ட குழு துணை தலைவர்  கூறும் போது,அதிக திறனுள்ள  நூற்பாலைகள், ‘நிட்டிங்’ துறைகளை திருப்பூர் பின்னலாடைத்துறை கொண்டுள்ளது. சாதாரண ரக ஆடை தயாரிப்பு எதிர்பார்க்கும் வளர்ச்சியை தராது. நிறுவனங்கள், மதிப்பு கூட்டப்பட்ட ஆயத்த ஆடை தயாரிப்பில் அதிக ஆர்வம் காட்டவேண்டும்.

இதன் மூலம்  ஆடை வர்த்தக மதிப்பு உயரும். உற்பத்தி நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவதோடு தொழிலாளர் நிலையும் உயரும்.தொழில் துறையினரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றித்தரப்படும் என தெரிவித்தார்.

 இதற்கு பதிலளித்த  ராஜாசண்முகம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்து அரசு உதவிக்கரம் நீட்டினால்  பின்னலாடை துறை சிறப்பான வளர்ச்சி நிலையை எட்டிப்பிடிக்கும் என்றார்.
Tags:    

Similar News