செய்திகள்
கோப்புபடம்.

நல்லாற்றில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை - பொதுப்பணித்துறை எச்சரிக்கை

Published On 2021-10-10 07:57 GMT   |   Update On 2021-10-10 07:57 GMT
அவிநாசி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கடைக்காரர்கள், இறைச்சிக்கழிவுகளை நல்லாற்றில் கொட்டுகின்றனர்.
அவிநாசி:

அவிநாசி நகரை மையமாக வைத்து நல்லாறு செல்கிறது. அவிநாசி எஸ்.மேட்டுப்பாளையம் முதல் சீனிவாசபுரம் வரையுள்ள நல்லாறு வழித்தடம் சமீபத்தில் பொதுப்பணி துறையினரால் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டது. 

குறிப்பாக சீனிவாசபுரம் பகுதியில் உள்ள வீடுகள், சுற்றியுள்ள கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகளில் இருந்து வெளியேறும் குப்பைக்கழிவுகள் ஆகியவை நல்லாற்றில் கொட்டப்படுகின்றன.

இதுகுறித்து பொதுப்பணி துறையினர் கூறியதாவது:-

அவிநாசி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கடைக்காரர்கள், இறைச்சிக்கழிவுகளை நல்லாற்றில் கொட்டுகின்றனர். இத்தகைய செயலை தவிர்க்க வேண்டும். அவர்களுக்குரிய உரிய அறிவுறுத்தலை வழங்குமாறு, பேரூராட்சி நிர்வாகத்திடமும் தெரிவித்துள்ளோம். 

சுற்றியுள்ள ஜாப் ஒர்க், பனியன் நிறுவனத்தினர், பனியன் கழிவுகளையும் நல்லாற்றில் கொட்டுகின்றனர். கடந்த வாரம் பனியன் கழிவு கொட்டுவதற்காக வந்த வாகனத்தை எச்சரித்து திருப்பி அனுப்பினோம். 

பெரும்பாலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தான் இத்தகைய விதிமீறலில் பலரும் ஈடுபடுகின்றனர். நல்லாற்றில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
Tags:    

Similar News