ஆன்மிகம்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

Published On 2019-06-21 04:14 GMT   |   Update On 2019-06-21 04:14 GMT
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
புதுவையை அடுத்த தமிழக பகுதியான பஞ்சவடியில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது.

திருப்பணிகள் முடிந்த நிலையில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் 5 நிலை ராஜகோபுரம், விநாயகர், ராமன் மற்றும் 36 அடி உயர ஆஞ்சநேயர் சன்னதி விமானங்கள் மற்றும் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீவாரி வெங்கடாசலபதி சன்னதி விமானத்துக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் 20 ஆயிரம் சதுரஅடி கொண்ட பிரமாண்ட யாகசாலையும், 37 குண்டங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகளான கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் கடந்த 17-ந் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை முதற்கால யாகபூஜை நடைபெற்றது.

நேற்று காலை, மாலையில் யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு பசு, யானை, நாட்டிய குதிரை உள்பட தசதரிசன பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சவடி ஜெயமாருதி சேவா அறக்கட்டளை செய்துவருகிறது.
Tags:    

Similar News