உடற்பயிற்சி
சண்முகி முத்திரை

சண்முகி முத்திரையும் ஓம் மந்திரமும்

Published On 2021-12-10 02:40 GMT   |   Update On 2021-12-10 02:40 GMT
ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம் மனதில் உள்ள தீய அனுபவப்பதிவுகள் அழிக்கப்படுகின்றது. ஓம் மந்திரம் உச்சரிப்பதால் நல்லவரின் தொடர்பு கிடைக்கின்றது.
விரிப்பில் நிமிர்ந்து அமரவும்.  முதுகெலும்பு நேராக இருக்கட்டும்.  தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும்.  கை பெருவிரலால் காதை நன்கு அடைக்கவும்.  மற்ற விரல்களை படத்தில் உள்ளதுபோல் வைக்கவும்.  காதை மட்டும் நன்கு அடைக்கவும். கண்களை மூடி ஐந்து நிமிடங்கள் இருக்கவும். ஓம்கார ஓசை வண்டின் ரீங்காரம் போல் ஒலிப்பதை உணர முடியும். பின் மெதுவாக கைகளை சாதாரண நிலைக்கு கொண்டு வரவும்.

உடன் கைகளை சின் முத்திரையில் வைக்கவும்.  பெருவிரல், ஆள்காட்டி விரல் நுனிகளை இணைக்கவும்.  கண்களை மூடி “ஓ” என்று சத்தமாக ஒலியை எழுப்பவும்,  அப்பொழுது உங்கள் உணர்வு முதுகுத் தண்டின் அடிப்பகுதியிலிருந்து பிராணன் மேல் நோக்கி வருவதாக “ஓ” என்று கூறி முடிந்த அளவு கூறி “ம்“ என்று சொல்லும் பொழுது உங்களது உணர்வு கழுத்து பின் பகுதியிலிருந்து உச்சந்தலை நெற்றிப்பொட்டு வழியாக இதயத்தில் “ம்“ என்று கூறி முடிக்கவும்.

இவ்வாறு ஒரு முறை கூறி ஒரு பத்து வினாடிகள் கழித்து மீண்டும் ஒரு முறை உச்சரிக்கவும்.  இவ்வாறு 12  முறை உச்சரிக்கவும்.  இது சிரமமாக இருந்தால்  “ஓம்“ என்று ஆழமாக முடிந்த அளவு “ஓ” என்று கூறி “ம்“ என்று கூறவும்  12 முறைகள். பின் இயல்பாக நடக்கும் மூச்சை 5  நிமிடங்கள் கூர்ந்து கவனிக்கவும்.

பலன்கள்

ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம் மனதில் உள்ள தீய அனுபவப்பதிவுகள் அழிக்கப்படுகின்றது.  ஓம் மந்திரம் உச்சரிப்பதால் நல்லவரின் தொடர்பு கிடைக்கின்றது.  இந்த உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்மாவின் தொடர்பு கிடைக்கின்றது.  உடல் முழுவதும் புத்துணர்வு ஓம் மந்திர அதிர்வலை மூலம் கிடைக்கின்றது.
Tags:    

Similar News