செய்திகள்

ஆண்டிப்பட்டியில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி மறுப்பு - அமமுகவினர் மறியல்

Published On 2018-11-09 06:44 GMT   |   Update On 2018-11-09 06:49 GMT
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தங்க தமிழ்செல்வன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். #AMMKProtest #ThangaTamilSelvan
தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதிமுக அரசைக் கண்டித்து வரும் 10 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, அ.ம.மு.க நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு அதிமுக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், தங்க தமிழ்செல்வன், கட்சியினருடன் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.



போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதிலும் மறியலை கைவிட தங்க தமிழ்செல்வன் மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். #AMMKProtest #ThangaTamilSelvan
Tags:    

Similar News