தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் நார்டு 2

ஒரு செல்பி கேமரா, மெல்லிய பெசல்களுடன் உருவாகும் நார்டு 2

Published On 2021-07-13 11:40 GMT   |   Update On 2021-07-13 11:40 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு 2 ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 ஸ்மார்ட்போன் ஜுலை 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், நார்டு 2 ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.



லீக் ஆகி இருக்கும் ரென்டர்களின் படி ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மிக மெல்லிய பெசல்கள், ஸ்கிரீனின் இடதுபுறத்தில் பன்ச் ஹோல் காணப்படுகிறது. முந்தைய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் இரட்டை செல்பி கேமராக்கள் வழங்கப்பட்டு இருந்தது. எனினும், புது ரென்டர்களின்படி நார்டு 2 ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்பி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

இத்துடன் புது ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் வால்யூம் பட்டன்கள், வலதுபுறத்தில் பவர் பட்டன் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புது நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News