செய்திகள்
ஜெர்மனி அருங்காட்சியக பழங்கால நகைகள்

ஜெர்மனி: அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பற்றி தகவல்கள் தருவோருக்கு ரூ. 3.94 கோடி பரிசு

Published On 2019-11-29 12:14 GMT   |   Update On 2019-11-29 12:14 GMT
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் குறித்து தகவல்கள் தருபவர்களுக்கு ரூ. 3.94 கோடி பரிசு வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
பெர்லின்: 

ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாக்சனி மாகாணத்தின் தலைநகர் டிரஸ்டனில் ‘கிரீன் வாலட்’ என்ற அருங்காட்சியகம்  உள்ளது. இங்கு ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

கடந்த 25-ம் தேதி அதிகாலை அந்த அருங்காட்சியகத்தின் ஜன்னல்களை உடைத்து உள்நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் 2 பேர், 18-ம்  நூற்றாண்டை சேர்ந்த வைரங்கள், மாணிக்கங்கள் உள்பட விலைமதிக்க முடியாத நகைகள் ஏராளமாக இருந்த நகை பெட்டி ஒன்றை  கொள்ளையடித்து சென்றனர்.  

அருங்காட்சியகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருப்பதாகவும், அதை அடிப்படையாக  கொண்டு அவர்களை வலைவீசி தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

இந்நிலையில், அருங்காட்சியக திருட்டு சம்பவம் குறித்து தகவல் தருபவர்களுக்கு 5 லட்சம் யூரோக்கள் சன்மானமாக வழங்கப்படும் என  ஜெர்மனி காவல்துறை அறிவித்துள்ளது. 5 லட்சம் யூரோக்கள் என்பது இந்திய மதிப்பில் 3 கோடியே 94 லட்ச ரூபாய் ஆகும். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் மதிப்புடையவை என கூறப்படுகின்றன.
Tags:    

Similar News