செய்திகள்
கோப்பு படம்

சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி

Published On 2020-09-15 00:03 GMT   |   Update On 2020-09-15 00:03 GMT
சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
டமாஸ்கஸ்:

சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள் பலர் பதுங்கியுள்ளனர். 

இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்களை அழிக்க இஸ்ரேல் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.

இந்நிலையில், சிரியாவின் டியிர் இசோர் மாகாணத்தில் அல்பு கமல் பகுதியில் நேற்று இஸ்ரேல் நாட்டின் விமானப்படையினர் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் சிரியாவில் செயல்பட்டுவந்த ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் பெருமாபாலானோர் ஈராக் நாட்டை சேர்ந்தவரள் எனபது தெரியவந்துள்ளது. சிரியாவில் 2011 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News