ஆட்டோமொபைல்
பஜாஜ் செட்டாக்

சக்திவாய்ந்த செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பஜாஜ்

Published On 2019-11-19 11:10 GMT   |   Update On 2019-11-19 11:10 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சக்திவாய்ந்த செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கே.டி.எம். அல்லது ஹஸ்குவர்னா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், செட்டாக் பிளாட்ஃபார்மில் புதிய ஸ்கூட்டர் சக்திவாய்ந்த மாடலாக உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது.



அதிக சக்திவாய்ந்த மாடல் என்பதால், இதில் செயல்திறன் மட்டுமின்றி அதிக தூரம் பயணிக்கும் வசதியும் வழங்கப்படலாம். இந்த ஸ்கூட்டரின் உற்பத்தி பணிகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலையும் அதிகமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

கே.டி.எம். அல்லது ஹஸ்குவர்னா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படும் என்பதால் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கூர்மையான வடிவமைப்பு, சிறப்பான ஹார்டுவேர் அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News