செய்திகள்
எடியூரப்பா, குமாரசாமி

கர்நாடக மேல்-சபையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாஜக முடிவு

Published On 2020-11-21 02:17 GMT   |   Update On 2020-11-21 02:17 GMT
கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவின் பலத்தை அதிகரிக்கும் விதமாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு போதிய உறுப்பினர்கள் பலம் இல்லை. இதனால் அரசு கொண்டு வரும் புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவின் பலத்தை அதிகரிக்கும் விதமாக ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்பு முதல்-மந்திரி எடியூரப்பாவை 2 முறை குமாரசாமி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது மேல்-சபையில் கூட்டணி அமைப்பது தொடர்பாக 2 பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மேல்-சபை தலைவர் பதவியை பா.ஜனதா வைத்து கொண்டு, துணை தலைவர் பதவியை ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் டிசம்பர் 7-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின் போது கர்நாடக மேல்-சபை தலைவராக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் சந்திர ஷெட்டிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அவ்வாறு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் பா.ஜனதாவுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு அளித்தால், மேல்-சபை தலைவரை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Tags:    

Similar News