லைஃப்ஸ்டைல்
குழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்ப்பது எப்படி?

குழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்ப்பது எப்படி?

Published On 2019-08-17 05:52 GMT   |   Update On 2019-08-17 05:52 GMT
பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்க எளிய தினசரி பாடங்களின் மூலம் மேம்படுத்த முடியும். குழந்தைகளின் மனதில் எப்படி தன்னம்பிக்கையை வளர்ப்பது என்று பார்க்கலாம்.
சரியான தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் குழந்தைகளால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்க எளிய தினசரி பாடங்களின் மூலம் மேம்படுத்த முடியும். குழந்தைகளின் மனதில் எப்படி தன்னம்பிக்கையை வளர்ப்பது என்று பார்க்கலாம்.

1. குழந்தை முன், உங்களை தாழ்த்திப் பேசுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக பிரச்சனைகளில் இருந்து விலகி செல்வதற்கு மாறாக, அவற்றை ஒரு மரியாதையான முறையில் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு தன்முனைப்பை உங்களிடம் இருந்து அவர்கள் கற்று கொள்ள வேண்டும்.

2. குழந்தையின் பல்வேறு நடவடிக்கைகளில் திருப்தியை வெளிப்படுத்துங்கள். அதிலும் குழந்தையின் திறமை அல்லது திறனை புகழ்வதற்கு பதிலாக, அவர்களது நடவடிக்கைகள் நினைத்து பெருமை அடைந்திருப்பதை வெளிப்படுத்துங்கள். "நீ மிகவும் புத்திசாலி" என்று சொல்வதை விட "நீ பள்ளியில் கடினமாக வேலை செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்று சொல்லலாம்.

3. பெற்றோர்கள் திறந்த மனதுடன் குழந்தையின் கவலைகளை கேட்க வேண்டும். குழந்தைகள் சிறிய கவலைகளினால் தன்னை ஒரு வேடிக்கையாக உணர்வதை தவிர்க்கவும். சில நேரங்களில் அவர்கள் கவலையடைவதை நியாயப்படுத்த திறந்த மனதோடு பேசுமாறு உற்சாகப்படுத்தவும்.

4. மூளையை குழப்பும் யோசனைகள் நிறைந்த வேலைகளை குழந்தையுடன் சேர்ந்து செய்யுங்கள். அது சூழ்நிலைகளை மாற்றுவதோடு, அவர்களை கவலையில் இருந்து விடுதலை அளிக்கும். அவர்கள் போர் அல்லது பஞ்சம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பற்றி கவலைப்பட்டால், இந்த பிரச்சினைகள் தனிப்பட்ட முறையில் அவர்களை எப்படி பாதிக்கும் என்று அவர்களோடு கலந்துறையாடி அதில் அவர்கள் எவ்வாறு தன்னை ஈடுபடுத்தி கொள்ளலாம் என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.

6. பெற்றோர்கள் பயம் மற்றும் சந்தேகம் அடைவதை, குழந்தைகள் முன்பு தணிக்கை செய்யுங்கள். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தோன்றுகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Tags:    

Similar News