ஆன்மிகம்
பொது ஆவுடையார் கோவில்

பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவிலில் கார்த்திகை சோமவார வழிபாடு

Published On 2020-11-18 07:25 GMT   |   Update On 2020-11-18 07:25 GMT
பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை சோமவார வழிபாடு நடந்தது. தொடர் மழை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பரக்கலக்கோட்டை கிராமத்தில் பொதுஆவுடையார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திங்கட்கிழமை அன்று நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது சிறப்பம்சம் ஆகும்.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு பொதுஆவுடையாரை தரிசனம் செய்வார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். வழக்கம்போல் இந்த ஆண்டும் கார்த்திகை முதல் சோமவார சிறப்பு வழிபாடு கோவிலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி பொதுஆவுடையார் கோவில் நடை நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர் மழை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

முகக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளி பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது. ஆங்காங்கே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News