லைஃப்ஸ்டைல்
பெண்கள் விரும்பும் வித்தியாசமான சல்வார் வகைகள்...

பெண்கள் விரும்பும் வித்தியாசமான சல்வார் வகைகள்...

Published On 2019-12-05 06:36 GMT   |   Update On 2019-12-05 06:36 GMT
சல்வார் அணிவது என்பது வடஇந்தியாவில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. சிறு பெண் குழந்தைகள் முதல் அனைத்து வயது பெண்களும் விரும்பி அணியக்கூடியவை சல்வார்கள்.
சல்வார் அணிவது என்பது வடஇந்தியாவில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. சிறு பெண் குழந்தைகள் முதல் அனைத்து வயது பெண்களும் விரும்பி அணியக்கூடியவை சல்வார்கள்.

சல்வார்கள் வாங்கக்கூடிய நியாயமான விலை, அணிவதற்கு எளிதாக மற்றும் வசதியாக இருப்பதால்தான் அனைவராலும் விரும்பி அணியக்கூடியவையாக உள்ளது.

டோத்தி சல்வார்ஸ்

பெண்கள் டோத்தி அணிந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் விளைவாக வடிவமைக்கப்பட்டு வந்திருப்பவையே டோத்தி சல்வார்கள். இன்றைய கால கட்டத்தில் மிகவும் ஸ்டைலான மற்றும் பிரபலமான சல்வார் வகை இவை என்று சொல்லலாம்.

இந்த கீழாடையை ஸ்ட்ரெய்ட் குர்திகளுடன் மட்டுமல்லாமல், அனார்கலியுடனும் இணைத்து அணியலாம். மிகவும் குட்டையான மேல் டாப்புகள், கச்சிதமான தொடை வரை நீண்ட வட்டக் கழுத்து, டி-ஷர்ட்டுகளுடனும் வீட்டில் அணியலாம்.

காட்டன், லினென், சில்க் மற்றும் ஜெர்சி வகைத் துணிகளிலும் இவ்வகை டோத்தி சல்வார்கள் தயாரிக்கப்படுகின்றன. கல்லூரி செல்லும் பெண்கள் மட்டுமல்லாது நடுத்தர வயது பெண்களும் இவற்றை விரும்பி அணிகிறார்கள்.

சிகரெட் பேன்ட்ஸ்

இவை மிகவும் நேர்த்தியான மற்றும் அதிநவீன பாட்டம் என்று சொல்லலாம். இந்த பேன்ட்டானது தோற்றத்திற்கு எளிமையானதாக இருந்தாலும், மிகவும் கம்பீரமான ஆளுமையைத் தருவதாக உள்ளது.

இந்த சிகரெட் பேன்ட்டுகளுடன் குர்திகள், அனார்கலி மற்றும் நீண்ட மேல் அங்கி போன்றவற்றை அணிந்து நாகரீகமாகத் தோன்றலாம்.

பெட்டல் பேன்ட்

‘ட்யுலிப்’ மலர்களின் தோற்றத்தில் ஈர்க்கப்பட்டு இவ்வகை பேன்ட்டை வடிவமைத்திருப்பார்களோ என்று எண்ணும் அளவுக்கு மிகவும் அழகாக உள்ளது. ட்யுலிப் மலர்களின் இதழ்களைப் போல ப்ளட்டுகள் கீழ்நோக்கியுள்ளன. முட்டிக்கால் வரை நீண்டிருக்கும் குர்திகளுடனும், அனார்கலியுடனும் அணியும்பொழுது வேடிக்கையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சுரிதார்கள்

ஏறத்தாழ பதினைந்து இருபது வருடங்களாக கால்களை இறுக்கிப் பிடிக்கும் சுரிதார் பேன்ட்டுகளாக இருந்தவை இப்பொழுது மாற்றம் பெற்று லெக்கிங்ஸாக மாறிவிட்டது என்றே தோன்றுகிறது. இருந்தாலும் இன்றளவும் இவ்வகை சுரிதார் பேன்ட்டுகள் பிரபலமாகவே உள்ளன.

சுரிதார்களில் இடுப்பில் குறைந்த அளவு ப்ளட்டுகள் இருக்கும். இவ்வகைச் சுரிதார் பேன்ட்டுகளை அணியும் குண்டான பெண்களை பிட்டாகவும், உயரமாகவும் காண்பிக்கின்றது. நீண்ட நேரான குர்திகள் மற்றும் அனார்கலியுடன் அணிய ஏற்றவை.

பாட்டியாலா

இவ்வகை சல்வார்கள் அன்று முதல் இன்று வரை எப்பொழுதும் அணிந்து கொள்ளக்கூடியவையாக உள்ளன. இவை பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டவை. பாட்டியாலாவில் இடுப்பிலிருந்தே ப்ளட்டுகள் தொடங்குகின்றன. இவை கோடை காலத்தில் அணிந்து கொள்ள மிகவும் வசதியாகவும், காற்றோட்டமாகவும் இருக்கும். இந்தப் பாட்டியாலாக்களின் மிகச் சிறப்பம்சம் என்னவென்றால் எப்படிப்பட்ட உடல்வாகு உடையவர்களுக்கும் இது பொருந்தும்.

அதேபோல் நீண்ட மற்றும் ஷார்ட் குர்திகளுடன் அணியலாம்.

ஹரேம் சல்வார்ஸ்

சிலர் இவ்வகை சல்வார்களைப் பயணம் செய்யும்பொழுது அணிவதைப் பார்க்க முடியும். ஏனென்றால் அவை மிகவும் வசதியாகவும், ஸ்டைலாகவும் இருப்பதேயாகும். ஷார்ட் குர்திஸ், க்ராப் டாப் மற்றும் டி ஷர்ட்டுகளுடன் அணிய ஏற்றவை.

ஆப்கானி சல்வார்கள்

இவற்றை அலாவுதீன் சல்வார் என்றும் அழைக்கிறார்கள். இவை சாதாரண சல்வார் மற்றும் பாட்டியாலாவைப் போல, ஆனால் கணுக்காலிற்கு மேல் பெரிய சுற்றுப்பட்டையைக் கொண்டிருக்கும். க்ராப் டாப்ஸ், ஸ்பெகடி, ஷார்ட் குர்திஸ் மற்றும் டேங்க் டாப்புகளுடன் அணியலாம்.

பளாஸோ

இந்தப் பேன்ட்டானது ஒவ்வொரு பெண்ணிடமும் குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கும். தொடை மற்றும் கால்கள் பருத்து இருப்பவர்களுக்கு அதை மறைத்து ஸ்டைலாகவும், அணிந்து கொள்ள வசதியாகவும் இருப்பவை இவை.

நீண்ட மற்றும் குட்டையான குர்திகளுடன் அணிய ஏற்றவை. சம காலத்திய பெண்களின் விருப்பத் தேர்வாக உள்ளது. பளாஸோக்களில் எத்தனையோ வகைகள் உள்ளன.

லெக்கிங்ஸ்

இவை அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இவை நம் உடலுடன் ஒட்டியும், நெகிழ்வு உடையதாகவும், வாங்கக்கூடிய விலையிலும் கிடைக்கின்றது. இவை கிட்டத்தட்ட அனைத்து வண்ணங்களிலும் கிடைக்கின்றன.

ஸ்ட்ரெய்ட் சல்வார்ஸ்

பளாஸோ மற்றும் பென்சில் பேன்ட் இரண்டும் கலந்த கலவையாக இவ்வகை பேன்ட்டுகள் உள்ளன. பளாஸோ பேன்ட்டுகளை விடக் குறுகலாகவும், சிகரெட் பேன்ட்டுகளை விட அகலமாகவும், மேலும் இடுப்பிலிருந்து கணுக்கால் வரை ஒரே அகலத்திலும் இருக்கின்றது.

சாதா சல்வார் பேன்ட்டுகள், சராராஸ், நீண்ட ஸ்கர்ட்டுகள், ஜெக்கிங்ஸ் எனப் பல வித்தியாசமான ஆடைகளைப் பெண்கள் தேடித் தேடி அணிகிறார்கள்.
Tags:    

Similar News