செய்திகள்
பெட்ரோல் பங்க்

ஹெல்மெட் இல்லை எனில் எரிபொருள் இல்லை - மேற்கு வங்காள அரசு அறிவிப்பு

Published On 2020-12-04 21:04 GMT   |   Update On 2020-12-04 21:04 GMT
ஹெல்மெட் அணியவில்லை என்றால் இரு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை என மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கென அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அப்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் வழங்கப்படாது.

இந்த புதிய விதி கொல்கத்தா நகரில் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. இந்த புதிய விதியானது, வரும் 8-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News