ஆட்டோமொபைல்
ஹோண்டா எஸ்பி 125

இந்தியாவில் ஹோண்டா எஸ்பி 125 விலை உயர்வு

Published On 2020-08-14 08:21 GMT   |   Update On 2020-08-14 08:21 GMT
ஹோண்டா நிறுவனம் தனது எஸ்பி 125 மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் உயர்த்தி உள்ளது.


ஹோண்டா நிறுவனம் தனது எஸ்பி 125 பிஎஸ்6 மாடல் விலையை ரூ. 955 அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்பி 125 மாடல் தற்சமயம் ரூ. 74,407, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 78607 என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஹோண்டா எஸ்பி 125 மாடலில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.7 பிஹெச்பி @7500 ஆர்பிஎம் மற்றும் 10.9 என்எம் டார்க் @9000 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

பிஎஸ்6 ஹோண்டா எஸ்பி 125 மாடலில் ஹோண்டாவின் ஹெச்இடி அம்சம் வழங்கப்படுகிறது. இது மோட்டார்சைக்கிளின் மைலேஜ், என்ஜின் பயன்பாடு போன்றவற்றை மேம்படுத்தி என்ஜினில் இருந்து வரும் சத்தத்தை குறைக்கும் திறன் கொண்டு இருக்கிறது.

ஹோண்டா எஸ்பி 125 மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லேம்ப், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப், ஹெட்லைட் பீம், பாசிங் ஸ்விட்ச், ஸ்போர்ட் அலாய் வீல் மற்றும் குரோம் எக்சாஸ்ட் மஃப்ளர் கவர் போன்றவை வழங்கப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News