தொழில்நுட்பம்
ஹெச்டிசி

இணைத்தில் லீக் ஆன புதிய மிட் ரேஞ்ச் ஹெச்டிசி ஸ்மார்ட்போன்

Published On 2020-04-27 05:52 GMT   |   Update On 2020-04-27 05:52 GMT
ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது.



ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பயேமோ எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஹெச்டிசி டிசையர் 20 ப்ரோ எனும் பெயரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புற தோற்றம் பார்க்க சியோமி எம்ஐ10 போன்றே காட்சியளிக்கிறது. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது. எம்10 மாடலில் உள்ளதை போன்றே இதன் பின்புறம் கேமரா மாட்யூல் இடதுபுறத்தில் பொருத்தப்படுகிறது.

புதிய ஹெச்டிசி ஸ்மார்ட்போனின் முன்புறம் பார்க்க ஒன்பிளஸ் 8 போன்று காட்சியளிக்கும் என்றும் இதில் ஒற்றை பன்ச் ஹோல் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஹெச்டிசி டிசையர் 20 ப்ரோ மாடலில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுவதாக தெரிகிறது.



கீக்பென்ச் வலைதள தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் மிட் ரேஞ்ச் மாடல்களை போன்ற புள்ளிகளை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இதன் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளிகளை வைத்து பார்க்கும் போது, இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 அல்லது சாம்சங் எக்சைனோஸ் 9611 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

எனினும், இதில் குவால்காம் பிராசஸர் வழங்கப்படுவது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 அல்லது அதற்கு இணையான பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய ஹெச்டிசி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News