ஆன்மிகம்
ஹயக்ரீவர்

கல்வி தோஷம் நீக்கும் தாடிக்கொம்பு ஹயக்ரீவர்

Published On 2020-11-03 05:39 GMT   |   Update On 2020-11-03 05:39 GMT
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் உள்ள ஹயக்ரீவரை தரிசித்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியடைந்து கல்வியில் சிறந்து விளங்குவர்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் சவுந்தரராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சவுந்தரராஜப் பெருமாள் கோவிலின் உட்பிரகாரத்தில், ராஜகோபுரத்தின் தென் பகுதியில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார். வேறு சில ஆலயங்களிலும் ஹயக்ரீவரை தரிசிக்க முடியும். ஹயக்ரீவர். இவரை தரிசித்தால் படிக்கும் பிள்ளைகளுக்கு ஞானம் விருத்தியடைந்து கல்வியில் சிறந்து விளங்குவர்.

எனவே தங்களது குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தாலோ, கல்வியில் பின்தங்கியிருந்தாலோ, கல்வியறிவு பெருக வேண்டி விரும்பினால் மாதம்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக எழுந்தருளி அருள்பாலிக்கும் ஹயக்ரீவருக்கு நடைபெறும் சிறப்பு திருமஞ்சன அலங்கார பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் நோட்டு, பேனா, தேன் மற்றும் ஏலக்காய் மாலையுடன் வந்து ஹயக்ரீவருக்கு சாத்தி பூஜையில் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்யலாம். இதில் அபிஷேகம் செய்த தேனை தோஷம் உள்ள குழந்தைக்கு கொடுத்து தொடர்ந்து ஹயக்ரீவரை பூஜித்து வந்தால் உடனடியாக தோஷம் நீங்கும்.

மேலும் பூஜையில் வைத்து அபிஷேகம் செய்யப்பட்ட தேனை குழந்தைகளின் நாவில் தடவிவிட்டு ஹயக்ரீவரர் மந்திரத்தை தொடர்ந்து மனதில் செபிக்க செய்தால் குழந்தைகள் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்குவர்.
Tags:    

Similar News