லைஃப்ஸ்டைல்
‘முகப்பரு’ - தவிர்க்கவேண்டிய உணவுகள்

‘முகப்பரு’ - தவிர்க்கவேண்டிய உணவுகள்

Published On 2021-07-09 03:25 GMT   |   Update On 2021-07-09 11:07 GMT
சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் ஊட்டசத்துமிக்க உணவுகள்தான் உதவும். முகப்பரு தொந்தரவை தவிர்க்க எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
முகப்பரு தொந்தரவை தவிர்க்க விரும்பும் பெண்கள் விலக்க வேண்டிய உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

* சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடுவது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கும் கேடுவிளைவிக்கும். சருமம் பொலிவிழப்பதோடு முகப்பரு பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். மேலும் சர்க்கரை அதிகம் கலந்த உணவுகளை சாப்பிடுவது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.

* சரும பளபளப்புக்கும், தண்ணீருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. போதுமான அளவு தண்ணீர் பருகும்போது உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் வெளியேறும். அதன் காரணமாக இயல்பாகவே சருமத்தில் ஜொலிப்பு தன்மை நிலைத்திருக்கும். தண்ணீர் குறைவாக பருகும்போது
சருமம்
பொலிவு இழப்பதுடன் வேறுபல உடல் உபாதைகளும் உருவாகும்.

* பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுப்பதோடு சருமத்திற்கும் கெடுதல் ஏற்படுத்தும். அதில் சேர்க்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், சர்க்கரை, செயற்கை மசாலா பொருட்கள் உடல் நலனை பாதித்துவிடும். ஆதலால் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்துவிட்டு காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் ஊட்டசத்துமிக்க உணவுகள்தான் உதவும். துரித உணவுகள், காரம் கலந்த மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

* கிரீன் டீ, சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், பச்சை காய்கறிகள், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் போன்றவை சருமத்தை பளிச்சிட வைக்கும் தன்மை கொண்டவை. சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சாப்பிடும் உணவு பழக்கத்தை பொறுத்துதான் சரும ஆரோக்கியம் அமைந்திருக்கும். அதை விடுத்து அழகு சாதன பொருட்கள் மூலம் அழகை மெருகூட்ட முயற்சிப்பது மட்டுமே சரும பொலிவுக்கு கைக்கொடுக்காது.
Tags:    

Similar News