செய்திகள்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைபடத்தில் காணலாம்.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2021-03-04 23:50 GMT   |   Update On 2021-03-04 23:50 GMT
அவினாசியை அடுத்த வெங்கக்கல்பாளையம் அருகே கடந்த மாதம் 27-ந்தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
அவினாசி:

அவினாசியை அடுத்த வெங்கக்கல்பாளையம் அருகே கடந்த மாதம் 27-ந்தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்று இரவு 8 மணிக்கு டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இதையடுத்து மீண்டும் அந்த கடை திறக்கப்பட்டதை அறிந்த பொதுமக்கள் நேற்று மாலை 6 மணி முதல் டாஸ்மாக் கடை முன்பு நின்று மதுக்கடையை மூட வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவலறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடம் சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் ஒரு தரப்பினர் டாஸ்மாக் கடையை மூடக்கூடாது. நாங்கள் இங்கிருந்து 5. கி.மீ தூரம் சென்று மது அருந்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. உள்ளூரில் மதுக்கடை வேண்டும் என்று மதுக்கடைக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். இரு தரப்பினர் கருத்துவேறுபாடு காரணமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசி டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் உங்களது கோரிக்கையை எடுத்து கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி டாஸ்மாக் கடையை மூடினார்கள். இருப்பினும் அந்த கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இரவு வரை பொதுமக்கள் அங்கேயே காத்திருத்தனர்.
Tags:    

Similar News