ஆன்மிகம்
விக்னேஷ்வர பூஜை

பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது

Published On 2021-10-26 05:31 GMT   |   Update On 2021-10-26 05:31 GMT
பழனியாண்டவர் கோவிலில் நாளை(புதன்கிழமை) யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.
நடுவீரப்பட்டு மதுரா சூரியன்பேட்டை கிராமத்தில் பழனியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ரக்‌ஷா பந்தனம், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் 2-ம் கால யாகசாலை பூஜைகள், திரவிய ஹோமங்கள், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற உள்ளது. நாளை(புதன்கிழமை) காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜைகள், கோ பூஜைகள், நாடி சந்தானம் நடைபெறுகிறது.

9.15 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து விநாயகர், பழனியாண்டவர், இடும்பன் ஆகிய சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் மாலை 7 மணியளவில் முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சூரியன்பேட்டை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News