செய்திகள்
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரியில் 22 தாசில்தார்கள் இடமாற்றம்- கலெக்டர் உத்தரவு

Published On 2021-07-16 04:16 GMT   |   Update On 2021-07-16 04:16 GMT
ஊட்டி பொது விநியோக திட்ட சிறப்பு தாசில்தாராக பணிபுரிந்து வந்த சிவகுமார் கூடலூர் தாசில்தார் ஆகவும், பந்தலூர் தாசில்தாராக பணிபுரிந்து வந்த தனிஷ்குமார் குன்னூர் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்கள், 3 வருவாய் கோட்டங்கள் உள்ளன. இங்கு பணிபுரிந்து வந்த தாசில்தார்கள் நிர்வாக காரணங்களால் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சிலருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி தாசில்தார்கள் 22 பேரை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டு இருக்கிறார்.

இதன்படி கூடலூர் தாசில்தாராக பணிபுரிந்து வந்த தினேஷ்குமார் ஊட்டி தாசில்தாராகவும், ஊட்டி தாசில்தாராக பணிபுரிந்து வந்த குப்புராஜ் பந்தலூர் தாசில்தார் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

குந்தா தாசில்தாராக பணிபுரிந்த மகேஸ்வரி நீலகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆகவும், அந்த பணியில் இருந்த மோகனா குந்தா தாசில்தார் ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஊட்டி பொது விநியோக திட்ட சிறப்பு தாசில்தாராக பணிபுரிந்து வந்த சிவகுமார் கூடலூர் தாசில்தார் ஆகவும், பந்தலூர் தாசில்தாராக பணிபுரிந்து வந்த தனிஷ்குமார் குன்னூர் தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

குன்னூர் தாசில்தாராக பணிபுரிந்து வந்த சீனிவாசன் கோத்தகிரி தாசில்தாராகவும், மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக இருந்த குமாரராஜா ஊட்டி சிறப்பு தாசில்தார் ஆகவும், கோத்தகிரி தாசில்தாராக பணிபுரிந்து வந்த கிருஷ்ணமூர்த்தி கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஊட்டி சிறப்பு தாசில்தாராக பணிபுரிந்து வந்த கே.மகேஸ்வரி கோத்தகிரி பழங்குடியினர் நல சிறப்பு தாசில்தாராகவும், அரசு கேபிள் டி.வி. சிறப்பு தாசில்தாராக பணிபுரிந்து வந்த லோகநாதன் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகை வரவேற்பு அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தாசில்தார்கள் மொத்தம் 22 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவின் நகல் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News