செய்திகள்
சத்குருவுடன் சந்தானம்

கோவில்கள் மீட்பு குறித்து இப்போது பேசுவது ஏன்? -சந்தானம் கேள்விக்கு சத்குரு சொன்ன பதில்

Published On 2021-03-13 15:51 GMT   |   Update On 2021-03-13 16:40 GMT
மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும் என சத்குரு தெரிவித்தார்.
சென்னை:

#கோவில்அடிமைநிறுத்து என்ற இயக்கம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட நடிகர் சந்தானம் பங்கேற்று சத்குருவுடன் கலந்துரையாடினர். அப்போது, சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளை சத்குருவிடம் முன் வைத்தார் சந்தானம்.

கேள்வி: கோவில்களை மீட்டு என்ன மாதிரி செய்ய முடியும்?

பதில்: முதலில் கோவில்கள் மன்னர்கள் கைகளில் இருந்தது. பின்னர் சமூகத்தில் சிலரின் கைகளில் இருந்தது. பின்னர் கிழக்கிந்திய கம்பெனி தான் அவற்றை கைப்பற்றியது. இன்று நான் கோவில்கள் என்று சொன்னால் வருமானம் குறித்து பேசுகிறார்கள். யார் கைகளில் கொடுக்க வேண்டும் என்றால் 87% மக்கள் தொகை கொண்ட சமுதாயத்தில் 20-25 திறமையான நேர்மையான மக்கள் இல்லை என்று அரசியல்வாதிகள், ஊடகத்தினர் முதற்கொண்டு அனைவரும் சொல்லி விடலாமே.

எப்படி நடத்தலாம் என்று கேட்டால் குருத்வாராக்களை பாருங்கள், 85 குருத்வாராக்களை கொண்டு 1௦௦௦ கோடிக்கு பட்ஜெட் போடுகிறார்கள்.  இது போன்ற பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும்.

கேள்வி: கோவில்கள் குறித்து இப்போது ஏன் பேச வேண்டும்? அரசியல் நோக்கங்கள் ஏதாவது இருக்கின்றதா?

பதில்: ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தான் நாயகர்கள். அவர்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். ஒரு அரசாங்கம்  அமைந்த பின்னர் போராட்டங்கள் செய்வதோ, மறியல் செய்வதோ பலன் அளிக்காது. தற்போது தேர்தல் வருகிறது. அதனால் நான் 5 கோரிக்கைகளை கூறி உள்ளேன், அதை நிறைவேற்ற உறுதி அளிப்பவர்களுக்கே எனது ஒட்டு. 

கேள்வி: கோவில்கள் குறித்து பேசும்போது கோவில்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்தின் கீழ் போய் விடும் என்ற சொல்கிறார்களே...?

பதில்: இது முழுவதும் உண்மை இல்லை. இந்த சாதிகள் எல்லாம் தொழில் அடிப்படையில் உருவானவை, இன்று நீங்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்றால் அதற்கான பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றன. அதே போல நெஞ்சில் பக்தியும் ஆர்வமும் இருக்கக்கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்.

இவ்வாறு சத்குரு கூறினார்.
Tags:    

Similar News