செய்திகள்
விஜயகாந்த்

போக்குவரத்து கழக பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

Published On 2020-09-16 06:47 GMT   |   Update On 2020-09-16 06:47 GMT
போக்குவரத்து கழக பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு போக்குவரத்து கழகம் தனியார் பஸ்களை வாடகைக்கு அமர்த்தி அரசு பஸ் வழித்தடத்தில் போக்குவரத்தை இயக்க அரசாணை போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகம் படிப்படியாக தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு இருக்கிறது. இதை உடனடியாக தவிர்ப்பதோடு இந்த அரசானையை ரத்துசெய்து ஏழை-எளிய மக்களும், குக்கிராமத்தில் வசிக்கும் மக்களும், பள்ளி குழந்தைகளும் பயன்படும் வகையில் தற்போது நஷ்டம் என்று தெரிந்தும் பொதுமக்கள் சேவையில் அரசு போக்குவரத்து கழகம் ஈடுபட்டு வருகிறது.

தனியார்மயம் ஆக்கப்பட்டால் லாபம் உள்ள வழித்தடங்களில் மட்டும் பஸ்களை இயக்குவார்கள். இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்திற்காகவும், தங்கள் உரிமைக்காகவும் அவர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் பணத்தை திரும்பப்பெறவும் பல கட்ட போராட்டங்கள் நடத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். மற்ற துறைகள் போன்று பொதுசேவையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News