உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு விருது

Published On 2021-12-08 07:30 GMT   |   Update On 2021-12-08 07:30 GMT
அரசு கல்லூரி மாணவர்கள் சமுதாய உணர்வோடு, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா பரவல் காலத்தில் பணியாற்றியது மிகவும் பாராட்டத்தக்கது.
திருப்பூர்:

கடந்தாண்டு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட நேரத்தில் தொற்று பரவல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட சேவை பணிகளில் ஈடுபட்ட திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்களை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா குமரன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - 2, அலுவலர் மோகன்குமார் வரவேற்றார்.

மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரவி சேவையாற்றிய மாணவர்கள், பெற்றோர் மற்றும் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கி பேசியதாவது:

இந்த உலகில் எல்லாம் தெரிந்தவர்கள் என யாரும் இல்லை. உலக விஷயங்களில் தெரிந்ததை விட தெரியாதவை அதிகம். சேவை செய்ய மனமிருந்தாலும், அதற்கான வாய்ப்பு அனைவருக்கும் அமையாது. 

உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தியுள்ளனர். அரசு கல்லூரி மாணவர்கள் சமுதாய உணர்வோடு, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா பரவல் காலத்தில் பணியாற்றியது மிகவும் பாராட்டத்தக்கது.

அவர்களை மனமுவந்து அனுப்பிய பெற்றோர்களும் பாராட்டுக்கு உரியவர்களே. இவ்வாறு அவர் பேசினார். முடிவில் மாணவர் செயலாளர் அருள்குமார் நன்றி கூறினார்.
Tags:    

Similar News