செய்திகள்
அந்த்ரே ரஸல்

மீண்டும் களம் இறங்கியதை சிறந்ததாக உணர்கிறேன்: அந்த்ரே ரஸல்

Published On 2020-11-02 12:49 GMT   |   Update On 2020-11-02 12:49 GMT
கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரரான அந்த்ரே ரஸல், காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் களம் இறங்கியதை சிறந்ததாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரஸல். இவர் சிக்ஸ் அடித்தால் பந்து கேலரியை தாண்டிவிடும். பந்தை மிகவும் பலமாக அடிக்கக்கூடியர். இவருக்கு இந்த ஐபில் சீசன் சிறப்பானதாக அமையவில்லை.

கடந்த 18-ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக விளையாடும்போது காயத்தால் அவதிப்பட்டார். அதன்பிறகு நான்கு போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். ஹாம்ஸ்டிரிங் இன்ஜுரி சரியான பிறகு, நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக களம் இறங்கினர். 11 பந்தில் 25 ரன்கள் விளாசினார்.

இந்நிலையில் மீண்டும் களத்திற்கு திரும்பியதை சிறந்ததாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த்ரே ரஸல் கூறுகையில் ‘‘மீண்டும் களத்திற்கு திரும்பியதை சிறந்ததாக உணர்கிறேன். காயத்தில் இருந்து மீண்டு வருதற்கான நேரம் மிகவும் கடினமான இருந்தது. ஒரு நாளைக்கு மூன்று முறையாக லேசாக வலியை உணர்ந்தேன்’’ என்றார்.

8 வாரங்கள் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய நிலையில், பிசியோ, மெடிக்கல் ஸ்டாஃப் சிறப்பாக சிகிச்சை அளிக்க 2 வாரத்தில் மீண்டு வந்துள்ளார் அந்த்ரே ரஸல். அவர் இதுவரை 9 போட்டிகளில் 96 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
Tags:    

Similar News