செய்திகள்
மெட்ரோ ரெயிலில் மாணவ-மாணவிகள் பயணம் செய்த காட்சி.

மெட்ரோ ரெயிலில் மாணவர்கள் கல்வி பயணம்

Published On 2019-11-21 06:44 GMT   |   Update On 2019-11-21 06:44 GMT
மெட்ரோ ரெயிலைப் பற்றியும் அதில் உள்ள வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் அறியும் வகையில் கல்விப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயிலைப் பற்றியும் அதில் உள்ள வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளின் மாணவ-மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு வழியாக விமானநிலையம், பரங்கிமலை மற்றும் வண்ணாரப்பேட்டையில் இருந்து ஏ.ஜி.டி.எம்.எஸ் வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் கல்விப்பயணம் ஏற்பாடு செய்து அழைத்து செல்லப்படுகின்றனர்.

கல்வி பயணங்கள் மாதந்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலின் சிறப்பு அம்சங்களை பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் மொத்தம் 31,178 மாணவ-மாணவியர்கள் மெட்ரோ ரெயிலில் பயணித்து பயன் பெற்றனர்.

2019-20-ம் கல்வி ஆண்டிற்கான கல்விப் பயணம் கடந்த ஜூன் 4-ந்தேதி முதல் தொடங்கியது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 6,641 மாணவர்கள் இந்த கல்விப் பயணத்தை மேற்கொண்டனர்.

கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 20,195 மாணவ-மாணவியர்கள் பயணம் செய்துள்ளனர்.

Tags:    

Similar News