செய்திகள்
டெங்கு காய்ச்சல்

புதுச்சேரியில் 92 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

Published On 2021-09-30 02:44 GMT   |   Update On 2021-09-30 02:44 GMT
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமலும், வீணாக கிடக்கும் பொருட்களில் மழைநீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் நல்ல தண்ணீரில் வளரும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சமீப காலமாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் டப்பாக்கள், டயர்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு கொசுக்களை உற்பத்தி செய்வதால் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.

புதுவையில் இதுவரை 92 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமலும், வீணாக கிடக்கும் பொருட்களில் மழைநீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ளுமாறும், சுற்றுப்புற பகுதியை சுத்தமாக வைக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
Tags:    

Similar News