ஆன்மிகம்
பழனி பெரியநாயகி அம்மன் கோவில்

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி காப்பு: கட்டு, அம்பு-வில் போடுதல் நிகழ்ச்சிகள் ரத்து

Published On 2020-10-16 08:17 GMT   |   Update On 2020-10-16 08:17 GMT
கொரோனா அச்சுறுத்தலால் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரியையொட்டி நாளை முதல் 24-ந்தேதி வரை சாமிக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் மட்டும் நடைபெறுகிறது. காப்புகட்டு, அம்பு-வில் போடுதல், சாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடுகள் நடத்தப்படும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியதன் காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் 24-ந்தேதி வரை சாமிக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் மட்டும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் காப்புகட்டு, அம்பு-வில் போடுதல், சாமி புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் சிறப்பு பூஜை நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இத்தகவல் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News