ஆன்மிகம்
ஆனைமலை பெருமாள் கோவிலில் கருடபஞ்சமி விழா

ஆனைமலை பெருமாள் கோவிலில் கருடபஞ்சமி விழா

Published On 2021-08-14 04:50 GMT   |   Update On 2021-08-14 04:50 GMT
ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவிலில் கருடபஞ்சமி விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
ஆடி மாதம் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதி அன்று வருவது கருடபஞ்சமி ஆகும். இதையொட்டி ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவிலில் கருடபஞ்சமி விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கருடாழ்வாருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், தேன், பச்சை அரிசி மாவு உள்ளிட்ட 9 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வேட்டிவேர் மாலை, தங்கநிலை பாசி மாலைகள் மற்றும் பூ மாலைகள் கொண்டு கருடாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் பழவகைகள், தேங்காய், எலுமிச்சை உள்ளிட்ட பொருட்கள் வைத்து பூஜை நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா காரணமாக அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள் மட்டும் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
Tags:    

Similar News