இந்தியா
பா.ஜ.க.வில் இணைந்த ஆர்.பி.என்.சிங்

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் மத்திய மந்திரி

Published On 2022-01-25 10:43 GMT   |   Update On 2022-01-25 11:39 GMT
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான ஆர்.பி.என். சிங் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் இணைந்தார்.
புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தற்போது அங்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

சட்டசபை தேர்தல் அறிவித்த நாள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள் பல்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இதற்கிடையே, முன்னாள் மத்திய மந்திரியும், உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.பி.என்.சிங் இன்று அக்கட்சியிலிருந்து விலகினார்.  அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைத்துள்ளார். விரைவில் அவர் பா.ஜ.க.வில் சேர உள்ளார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு சென்ற ஆர்.பி.என்.சிங்கை, மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், தர்மேந்திர பிரதான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  அவர்களது முன்னிலையில் பா.ஜ.க.வில் சிங் தன்னை இணைத்து கொண்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இது எனக்கான புதிய தொடக்கம்.  பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் தலைமையின் கீழ் தேசக்கட்டமைப்பில் நானும் பங்காற்ற உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆர்.பி.என். சிங்கின் விலகல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News