வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆண்டாள்-ரெங்கமன்னார் எழுந்தருளினர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு பக்தர்களின்றி நடைபெற்றது

Published On 2022-01-13 04:58 GMT   |   Update On 2022-01-13 06:44 GMT
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் யாருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் மார்கழி உற்சவமானது கடந்த 3-ந் தேதி பச்சை பார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அன்று முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் பகல்பத்து உற்சவம் நேற்று நிறைவு பெற்றது. ராப்பத்து உற்சவம் இன்று ஆரம்பமான நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

முன்னதாக அதிகாலை 4.30 மணியளவில் ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 7.35 மணிக்கு பரமபத வாசல் எனும்
சொர்க்கவாசல்
திறக்கப்பட்டு அதன் வழியாக ஆழ்வார்கள் எதிர்கொள்ள முதலில் பெரியபெருமாள் பின்பு ஆண்டாள்- ரெங்கமன்னார் வந்தனர். இதில் கோவில் பட்டாசாரியார்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று காலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்கள் யாருக்கும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் ஏராளமான பக்தர்கள் கோவில் வெளியே நின்றிருந்து ஆண்டாள் -ரெங்கமன்னாரை தரிசித்தனர். 8 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். .

இதையும் படிக்கலாம்....தைதிருநாள் நாளை மாலை பிறக்கிறது: பொங்கல் வைக்கும் நேரம் எப்போது?
Tags:    

Similar News