செய்திகள்
பிரதமர் மோடி

உ.பி.யில் புதிய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

Published On 2021-09-13 23:20 GMT   |   Update On 2021-09-13 23:29 GMT
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைப்பதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
லக்னோ:

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உத்தர பிரதேச மாநிலம் அலிகாருக்குச் செல்கிறார். அங்கு லோதா பகுதியில் ராஜா மகேந்திர பிரதாப்சிங் பல்கலைக்கழகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அலிகாரில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நேற்று போர்க்கால அடிப்படையில் நடந்தன. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா ஆகியோர் நேற்று நேரில் சென்று ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர். மாவட்ட கலெக்டர் செல்வகுமாரியும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

பிரதமர் மோடி உள்ளிட்டோர் அமர்வதற்காக தனி மேடையும், அதன் இரு புறமும் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அமர்வதற்காக 2 தனித்தனி மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேடை அலங்காரத்துக்கு நேற்று இறுதி வடிவம் அளிக்கப்பட்டது. மேடை அருகே பல்கலைக்கழகத்தின் மாதிரி வடிவம் நிறுவப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News