ஆட்டோமொபைல்
மஹிந்திரா பொலிரோ

இந்தியாவில் மஹிந்திரா பொலிரோ ஏ.பி.எஸ். அறிமுகம்

Published On 2019-07-05 07:57 GMT   |   Update On 2019-07-05 07:57 GMT
மஹிந்திரா நிறுவனம் ஏ.பி.எஸ். வசதி கொண்ட பொலிரோ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ காரை சத்தமில்லாமல் அப்டேட் செய்துள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் நான்கு சக்கர வாகனங்களில் ஏ.பி.எஸ். வழங்குவது கட்டாயமாகிறது. இதுதவிர புதிய வாகனங்களில் ஓவர்-ஸ்பீடிங் அலாரம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீ்ட்-பெல்ட் ரிமைன்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்க வேண்டும்.

இதன் காரணமாக மஹிந்திரா தனது பொலிரோ காரில் புதிய பாதுகாப்பு அம்சங்களை வழங்கியுள்ளது. இத்துடன் ஏ.பி.எஸ். பொலிரோ மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய காரை மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் விற்பனை மையங்களில் முன்பதிவு செய்யலாம்.

முன்னதாக ஏ.பி.எஸ். வசதி கொண்ட மஹிந்திரா பொலிரோ புகைப்படம் இணையத்தில் வெளியானது. தனது வலைத்தளத்தில் மஹிந்திரா தனது வாகனத்தை பட்டியலிட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். புதிய பொலிரோ வாகனத்தின் விலையை மஹிந்திரா இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், இது முந்தைய மாடலை விட விலை அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.



இந்தியாவில் BNVSAP பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்யும் புதிய பொலிரோ காரும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் புத்தம் புதிய பி.எஸ். 6 ரக என்ஜினும் வழங்கபப்டுகிறது. இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் பி.எஸ். 6 புகை விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனும் விதிமுறை ஏப்ரல் 1, 2020 முதல் அமலாகிறது.

புதிய பாதுகாப்பு உபகரணங்கள் தவிர காரின் என்ஜின் மற்றும் இதர அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் மஹிந்திரா பொலிரோ கார் விலை ரூ. 7.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News