ஆன்மிகம்
தை அமாவாசையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் நாளை புனித நீராட தடை

தை அமாவாசையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் நாளை புனித நீராட தடை

Published On 2021-02-10 04:53 GMT   |   Update On 2021-02-10 04:53 GMT
நாளை(வியாழக்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு திருவையாறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்று படித்துறைகளில் புனித நீராடவும், திதி கொடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கங்கை நதிக்கு நிகரான காவிரி ஆறு ஓடுவதாலும் அப்பருக்கு சிவபெருமான் தனது பரிவாரங்களுடன் காட்சி அருளியதாலும் கயிலைக்கு ஒப்பான தென் கயிலாயம் என்று வணங்கப்படும் ஐயாறப்பர் கோவில் விளங்குவதால் பித்ரு கடன் செலுத்துவதற்கு "காசிக்கு வீசம் கூட " என்று காசியை விட மேலானதாக பக்தர்களால் சிறப்பித்து கருதப்படும் புனித சிவஸ்தலமாக திருவையாறு திகழ்கிறது.

இத்தகைய புனிதஸ் தலமான திருவையாற்றுக்கு ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, கடைமுழுக்கு, தை அமாவாசை மற்றும் மாசி மகம் ஆகிய நாட்களில் திருவையாறு மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பொதுமக்கள் வந்து காவிரியில் புனித நீராடி, தமது முன்னோர்களுக்கு பித்ருக் கடன் செலுத்தி, ஐயாப்பரை வழிபடுவது தொன்றுதொட்டு வழக்கமாக உள்ளது.

இவ்வாண்டு கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, அரசின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் திருவையாறு பேரூராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை மற்றும் போலீசார் அரசுத் துறைகளின் கூட்டுப் பொறுப்புடன் திருவையாறு காவிரி ஆற்றில் நாளை பொதுமக்கள் புனித நீராடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News