ஆட்டோமொபைல்
கேடிஎம் ஸ்கூட்டர்

புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்க பஜாஜ் மற்றும் கேடிஎம் கூட்டணி

Published On 2020-04-14 06:15 GMT   |   Update On 2020-04-13 12:24 GMT
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்க பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருக்கின்றன.



பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, மோபெட்களும் மோட்டாரைஸ்டு சைக்கிள்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய வாகனங்கள்  உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. உற்பத்தி பணிகள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சக்கன் ஆலையில் 2022 ஆம் ஆண்டு வாக்கில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பவர்டு டு வீலர் சிட்டம் பைரெர் மொபிலிட்டி குழுமம் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் துவங்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் 3 முதல் 10 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.



பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்களிடையேயான கூட்டணி 2007 ஆம் ஆண்டு துவங்கியது. அன்று முதல் இதுவரை இரு நிறுவனங்கள் கூட்டணியில் பல்வேறு வாகனங்கள் மோட்டார்சைக்கிள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இரு நிறுவனங்கள் கூட்டணியின் கீழ் வெளியான முதல் வாகனம் பஜாஜ் பல்சர் 200 என்எஸ் ஆகும். இதில் கேடிஎம் டியூக் 200 என்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 
 
பஜாஜ் மற்றும் கேடிஎம் கூட்டணியின் அங்கமாக கேடிஎம் நிறுவனத்தின் அனைத்து ஹஸ்குவர்னா மாட்களின் உற்பத்தி பணிகளும் பூனேவுக்கு மாற்றப்பட்டு இருக்கின்றன. இதுதவிர பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் மாடலை ஐரோப்பிய சந்தைக்கு கேடிஎம் மூலம் ஏற்றுமதி செய்து வருகிறது. 
Tags:    

Similar News