ஆட்டோமொபைல்
டொயோட்டா கார்

மீண்டும் விலை உயர்வை அறிவித்த டொயோட்டா

Published On 2021-03-29 06:55 GMT   |   Update On 2021-03-29 06:55 GMT
மற்ற நிறுவனங்களை போன்றே டொயோட்டா நிறுவனமும் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.


டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களின் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்படுவதாக அறிவித்தது. இந்த நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்கள் விலையும் ஏப்ரல் 1, 2021 முதல் உயர்கிறது. இந்த ஆண்டில் டொயோட்டா கார் விலை உயர்த்தப்படுவது இரண்டாவது முறை ஆகும்.



முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் டொயோட்டா தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தியது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட் மற்றும் நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும். உற்பத்திக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவேதே வாகனங்கள் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகின்றன.

கார் உற்பத்திக்கு தேவைப்படும் ஸ்டீல், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுதவிர கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது உற்பத்தி பணிகளை அதிக சவால் மிக்கதாக மாற்றி இருக்கிறது.
Tags:    

Similar News