தொழில்நுட்பம்

48 எம்.பி. கேமரா கொண்ட ஒப்போ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-03-06 08:16 GMT   |   Update On 2019-03-06 08:16 GMT
ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #OPPOF11Pro #Smartphone



ஒப்போ நிறுவனம் இந்தியாவில் எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் பானாரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா நைட் மோட், டேசிள் கலர் மோட் மற்றும் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. என்ஜின், அல்ட்ரா-க்ளியர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் 3D கிரேடியன்ட் பேக், தண்டர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. புதிய ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹச். பேட்டரி மற்றும் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளது.



ஒப்போ எஃப்11 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.சடி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12என்.எம். பிராசஸர்
- 900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79,  1/2.25″, 0.8um பிக்சல், 6P லென்ஸ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.12um பிக்சல்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0

ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் தன்டர் பிளாக் மற்றும் அரோரா கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.24,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் அமேசான், ப்ளிப்கார்ட், பேடிஎம் மால், ஸ்னாப்டீல், ஒப்போ ஸ்டோல் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் மார்ச் 15 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. 

அறிமுக சலுகைகள்

சேத காப்பீடு
ரூ.2000 ஏர்டெல் உடனடி கேஷ்பேக் மற்றும் 10 ஜி.பி. டேட்டா
ஜியோ பயனர்களுக்கு 3200 ஜி.பி. 4ஜி டேட்டா
ஜியோ மற்றும் மேக் மை ட்ரிப் ரூ.4900 மதிப்புள்ள பலன்கள் 
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 5 சதவிகிதம் தள்ளுபடி
வட்டியில்லா மாத தவணை முறை வசதி
Tags:    

Similar News