செய்திகள்
கைதான முகம்மது சோகில் ரானா.

திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் வங்காளதேசத்தினர் பதுங்கல்

Published On 2021-07-17 09:28 GMT   |   Update On 2021-07-17 09:28 GMT
திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன் நகர் பகுதியில் திருமுருகன் பூண்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருப்பூர்:

தொழில் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். 

இந்த நிலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூரில் வங்காளதேசத்தினர் தங்கி இருப்பதாக திருப்பூர் மாநகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் கடந்த மாதம் 24-ந்தேதி அனுப்பர்பாளையத்தில் தங்கியிருந்த 3 வங்காளதேசத்தினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன் நகர் பகுதியில் திருமுருகன் பூண்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவர் வங்காளதேசத்தை சேர்ந்த முகம்மது சோகில் ரானா (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் அவர் திருப்பூரில் கடந்த 2 வருடங்களாக எந்த ஆவணங்களும் இன்றி தங்கியிருந்து பனியன் கம்பெனியில் வேலை செய்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். திருப்பூரில் வட மாநிலத்தொழிலாளர்கள் போர்வையில் பதுங்கி இருக்கும் வங்காளதேசத்தினரை கண்டறியும் வகையில் திருப்பூர் மாநகர போலீசார் பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News