செய்திகள்
சன்னி வஃக்பு வாரிய வழக்கறிஞர் சஃபரியாஃப் ஜிலானி

அயோத்தி வழக்கின் தீர்ப்பில் திருப்தியில்லை- சன்னி வக்பு வாரியம்

Published On 2019-11-09 06:43 GMT   |   Update On 2019-11-09 06:43 GMT
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் திருப்தியில்லை என்று சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தீர்ப்பை வாசித்தார்.

சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அயோத்தி தீர்ப்பு குறித்து அனைத்து முஸ்லீம் சட்டவாரிய அமைப்பின் பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது சன்னி வஃக்பு வாரிய வழக்கறிஞர் சஃபரியாஃப் ஜிலானி கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு திருப்தியில்லை. தீர்ப்பை யாருடைய வெற்றி தோல்வியாக கருதக்கூடாது.  உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனைத்து கருத்துக்களையும் நாங்கள் மறுக்கவில்லை. தீர்ப்புக்கு எதிராக எங்கும் எந்த போராட்டமும் நடத்தக்கூடாது. தீர்ப்பு குறித்து உரிய ஆலோசனைக்குப் பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தீர்ப்பின் முழு விவரத்தை படித்தப்பின் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News