லைஃப்ஸ்டைல்
நேந்திரம் பழ கட்லெட்

சத்தான ஸ்நாக்ஸ் நேந்திரம் பழ கட்லெட்

Published On 2021-02-05 05:22 GMT   |   Update On 2021-02-05 05:22 GMT
குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் நேந்திரம் பழத்தில் கட்லெட் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

நேந்திரம் பழம் - 3
தேங்காய் துருவல் - 1 கப்
நாட்டு சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 1/2 டேபிள் ஸ்பூன்
கோதுமை .மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பிரெட் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

நேந்திரம் பழத்தை ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பழத்தின் நடுவில் உள்ள கறுப்பு விதைகளை நீக்கி விட்டு பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நாட்டு சர்க்கரை, பொடித்த தேங்காய் துருவலும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

பின்னர் இதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.

இதில் ஏலக்காய் தூள், நறுக்கிய முந்திரிப் பருப்பு சேர்த்து தண்ணீர் வற்றி சுருண்டு வரும் போது இறக்கி வைக்கவும்.

மசித்து வைத்திருக்கும் பழத்தில் இந்த கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதனுடன் அரிசி மாவை சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.

கோதுமை மாவை ஒரு பவுளில் போட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து கொஞ்சம் லூசான பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

பிசைந்து வைத்த பழக்கலவையில் இருந்து கொஞ்சம் எடுத்து கையில் வைத்து தட்டி வட்ட வடிவமாகசெய்து கோதுமை மாவில் முக்கி பிரெட் தூளில் போட்டு நன்றாக புரட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்திருக்கும் கட்லெட்களை போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

நல்ல கிரிஸ்ப்பியான நேந்திரம் பழ கட்லெட் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News