தொழில்நுட்பம்
வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா சலுகைகளின் விலை உயர்த்தப்பட்டது - புதிய விலைப்பட்டியல்

Published On 2019-12-02 04:28 GMT   |   Update On 2019-12-02 04:28 GMT
வோடபோன் ஐடியா நிறுவன சலுகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலைப்பட்டியல் முழு விவரங்களை பார்ப்போம்.



வோடபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது சேவைகளின் கட்டணத்தை உயர்த்தியது. புதிய விலை டிசம்பர் 3-ம் தேதி முதல் அமலாகிறது. டெலிகாம் சந்தையில் கடந்த காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 50,922 கோடி இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சேவை கட்டணங்களை உயர்த்துவதாக வோடபோன் ஐடியா அறிவித்து இருக்கிறது.

புதிய விலைப்பட்டியலின் படி அன்லிமிட்டெட் சலுகைகள் ரூ. 149 முதல் துவங்கி, ரூ. 249, ரூ. 299 மற்றும் ரூ. 399 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 149 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, தினமும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ. 249 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ரூ. 299 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ. 399 சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. அனைத்து அன்லிமிட்டெட் சலுகைகளும் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கின்றன.

84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகள் ரூ. 379, ரூ. 599 மற்றும் ரூ. 699 விலையில் கிடைக்கின்றன. அதன்படி ரூ. 379 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு மாதத்திற்கு 6 ஜி.பி. டேட்டா, 1000 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ. 599 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ரூ. 699 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.



வருடம் முழுக்க வேலிடிட்டி வழங்கும் இரு சலுகைகளை ரூ. 1499 மற்றும் ரூ. 2399 விலையில் வழங்குகிறது. இதில் ரூ. 1499 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், மாதத்திற்கு 24 ஜி.பி. டேட்டா, 3600 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ரூ. 2399 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

அன்லிமிட்டெட் சலுகை தவிர குறுகியகால சாஷெட் சலுகைகளும் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 19 முதல் துவங்குகிறது. ரூ. 19 சலுகையில் வோடபோன் ஐடியாவில் இருந்து வோடபோன் ஐடியா எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 150 எம்.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். இரண்டு நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

அன்லிமிட்டெட் சலுகை வேண்டாம் என்போருக்கு காம்போ வவுச்சர் சலுகை வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 49 மற்றும் ரூ. 79 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. பலன்களை பொருத்தவரை ரூ. 49 சலுகையில் ரூ. 38 டாக்டைம், 100 எம்.பி. டேட்டா, அழைப்பு கட்டணம் நொடிக்கு 2.5 பைசா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 79 சலுகையில் ரூ. 64 டாக்டைம், 200 எம்.பி. டேட்டா மற்றும் அழைப்பு கட்டணம் நொடிக்கு 1 பைசா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் ரூ. 97, ரூ. 197, ரூ. 297 மற்றும் ரூ. 647 விலையில் ரீசார்ஜ் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 97 சலுகையில் ரூ. 45 டாக்டைம், 100 எம்.பி. டேட்டா, அழைப்பு கட்டணம் நொடிக்கு 1 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ரூ. 197 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 2 ஜி.பி. டேட்டா, 300 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 297 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. ரூ. 647 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.ெஸ். வழங்கப்படுகிறது.

புதிய சலுகைகளை வாடிக்கையாளர்கள் டிசம்பர் 3-ம் தேதியில் இருந்து பயன்படுத்த முடியும். இவற்றை மைவோடபோன் அல்லது மைஐடியா செயலி மற்றும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் இருந்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
Tags:    

Similar News