செய்திகள்
அன்புமணி ராமதாஸ்- மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ்

Published On 2021-09-08 10:09 GMT   |   Update On 2021-09-08 10:48 GMT
முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புமணி ராமதாஸ் சந்தித்த போது அவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று அவரது அலுவலகத்தில் பா.ம.க.வின் முக்கிய நிர்வாகியும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் சந்தித்தனர்.



அப்போது தங்களது மகள் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை அவர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர். இந்த சந்திப்பின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News