கிறித்தவம்
புனித சவேரியார்

சவேரியாருக்கு புனிதர் பட்டம்

Published On 2021-12-07 04:55 GMT   |   Update On 2021-12-07 04:55 GMT
இயேசுவின் நற்செய்தியை போதித்து இறைஊழியம் செய்து பெரும் சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று விட்டு இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர் நீத்தார். அவரது புனித உடல் பல மாதங்களுக்கு பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, 100-க்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து இறைஊழியம் செய்து பெரும் சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Tags:    

Similar News