செய்திகள்
சஸ்பெண்டு

கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்ற 7 பேர் சஸ்பெண்டு- டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2021-09-16 09:46 GMT   |   Update On 2021-09-16 09:46 GMT
சென்னையில் எலைட் மதுபானக் கடைகளில் உயர்ரக மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சென்னை:

சென்னையில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக பார்கள் நடத்தக் கூடாது என்றும், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னையில் எலைட் மதுபானக் கடைகளில் உயர்ரக மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரின் உத்தரவின் பேரில், சென்னை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் 2 உயர் ரக மதுபானக் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 750மில்லி மதுபானங்கள் ரூ.20 முதல் ரூ.25 வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. அரசின் உத்தரவை மீறி கூடுதல் விலைக்கு மதுபான்கள் செய்த 2 மேற்பார்வையாளர்கள், 5 விற்பனையாளர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் அதிகபட்ச விலையை விட கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது என்றும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக்கப்படும். மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த பார்களில் மது அருந்தவோ, திண்பண்டங்கள் விற்பனை செய்யவோ கூடாது என்றும், சில்லரை விற்பனை கடைகளில் மதுபானங்கள் மொத்த விற்பனை செய்யக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News