தொழில்நுட்பச் செய்திகள்
கேலக்ஸி எஸ்21 எப்.இ.

வெளியீட்டுக்கு முன் விற்பனைக்கு பட்டியலிடப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

Published On 2021-12-27 04:17 GMT   |   Update On 2021-12-27 04:17 GMT
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு முன் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது.


சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் 2022 சி.இ.எஸ். நிகழ்வில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வெளியீடு பற்றி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதன் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் பலமுறை இணையத்தில் வெளியாகிவிட்டன.

சாம்சங்கின் புதிய எப்.இ. ஸ்மார்ட்போன் வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன்பே இந்த ஸ்மார்ட்போன் வால்மார்ட் தளத்தில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது. இதன் 128 ஜி.பி. கிராபைட் நிற வேரியண்ட் விலை 699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 52,450 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 



இந்த பதிவில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் புகைப்படம்  இடம்பெறவில்லை. அந்த வகையில், இந்த பதிவு தவறுதலாக இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது. இதன் 128 ஜி.பி. விலை 699 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், 256 ஜி.பி. விலை 749 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்படலாம். 

வால்மார்ட் பதிவுகளின் படி இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே பல நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதனால் அறிமுகமானதும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News