லைஃப்ஸ்டைல்
வாழைக்காய் மிளகு வறுவல்

வாழைக்காயில் சூப்பரான வறுவல் செய்யலாமா?

Published On 2021-03-04 09:34 GMT   |   Update On 2021-03-04 16:26 GMT
வாழைக்காய் வாய்வு என்று பலரும் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் வாழைக்காயுடன் மிளகு சேரும் போது உங்கள் பயம் பறந்தேவிடும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச்
பூண்டு - 5
மிளகு - 3 டீஸ்பூன்

செய்முறை

வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும். வெட்டிய வாழைக்காயை அரை வேக்காடு வேகவைத்து கொள்ளவும்.

வேக வைத்த வாழைக்காயை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News