செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவால் உயிரிழப்பு - அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது

Published On 2020-09-23 19:53 GMT   |   Update On 2020-09-23 19:53 GMT
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
வாஷிங்டன்:

உலகையே உலுக்கி வரும் கொரோனாவின் தாக்கம் உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிகமாக உள்ளது. தொற்றும், உயிரிழப்பும் அங்கு தான் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அங்கு நேற்று வரை மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதில் அதிகபட்சமாக நியூயார்க் மாகாணத்தில் 33 ஆயிரத்து 92 பேரும், நியூ ஜெர்சியில் 16 ஆயிரத்து 69 பேரும் பலியாகி இருக்கிறார்கள். பெனிசில்வேனியா உள்ளிட்ட இடங்களில் 7 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். கடந்த மே 27-ந்தேதி வரை, அமெரிக்காவில் 1 லட்சம் பேர் மட்டுமே கொரோனாவால் இறந்திருந்தனர். ஆனால் கிட்டத்தட்ட 4 மாதத்துக்குள் அது 2 மடங்காக உயர்ந்திருக்கிறது.

இதற்கிடையே, தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பை கவனிக்க தவறினால், அமெரிக்கா பேரிழப்பை சந்திக்க நேரிடும் என்று பிரபல தொற்று நோய் தடுப்பு மருத்துவர் அந்தோணி பவுசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News