செய்திகள்
பிரதமர் மோடி

இந்தி பல்வேறு அம்சங்களை அழகாகக் கொண்டுள்ளது -பிரதமர் மோடி

Published On 2019-09-14 07:26 GMT   |   Update On 2019-09-14 07:26 GMT
இந்தி மொழி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்துக்கூறி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியில் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளை வெளியிடுவோரில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து ஆசிரியருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி ஏற்றது. ஆட்சி மொழித்துறை என்ற பிரிவு இவ்விழாவினை நடத்துகிறது.

ஆண்டுதோறும் இந்தியில் செயல்பாடுகளை மேற்கொள்வோருக்கு விருது வழங்கப்படுகிறது. முதன்முதலாக, 1975ம் ஆண்டு இவ்விழா கொண்டாடப்பட்டது. இதற்கு காலை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.



அதில், ‘நாட்டில் அவரவர் தாய்மொழியையே பேசும் அதே நேரத்தில் இந்தியை அனைவரும் பயில வேண்டும். மக்கள் இந்தியில் பேசுவதற்கு பயில வேண்டும். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள். மொழியின் எளிமை, தனித்துவம், மொழியின் தரம் ஆகியவையே உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கு அர்த்தம் அளிக்கின்றன. இதுபோன்ற பல்வேறு அம்சங்களை இந்தி மொழி அழகாகக் கொண்டுள்ளது’ என பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News