தொழில்நுட்பம்
லெனோவோ தின்க்ஸ்மார்ட் வியூ ஸ்மார்ட் டிஸ்ப்ளே

லெனோவோ தின்க்ஸ்மார்ட் வியூ ஸ்மார்ட் டிஸ்ப்ளே அறிமுகம்

Published On 2020-01-06 05:53 GMT   |   Update On 2020-01-06 05:53 GMT
லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே தின்க்ஸ்மார்ட் வியூ பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



லெனோவோ நிறுவனம் தின்க்ஸ்மார்ட் வியூ என்ற பெயரில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை கொண்டு மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சார்ந்த ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். கூகுளின் ஹோம் ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு மாற்றாக இந்த சாதனம் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் சேவையை கொண்டு இயங்குகிறது.

இந்த சாதனத்தின் விற்பனை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் தின்க்பேட் எக்ஸ்1 ஏ.என்.சி. ப்ளூடூத் ஹெட்செட் ஒன்றும் வழங்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, இன்டகிரேட்டெட் கேமரா மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகிறது. லெனோவோ ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் 5 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, பிரைவசி ஷட்டர், டூயல் மைக்ரோபோன் அரே, 1.75 இன்ச் 10 வாட் ஃபுல்-ரேன்ஜ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது.



லெனோவோ தின்க்ஸ்மார்ட் வியூ டிஸ்ப்ளேவில் குவால்காம் ஏ.பி.கியூ.8053 சிஸ்டம் ஆன் சிப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ப்ளூடூத் ஹெட்செட்களுடன் பயன்படுத்த ப்ளூடூத் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. இ.எம்.எம்.சி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதன் எடை ஒரு கிலோவுக்கும் குறைவாகவே இருக்கிறது. 

தின்க்ஸ்மார்ட் வியூ டிஸ்ப்ளேவுடன் லெனோவோ நிறுவனம் தின்க்சென்ட்டர் எம்90ஏ ஏ.ஐ.ஒ. என்ற பெயரில் மற்றொரு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள், 23.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே, ஆப்ஷனல் பிரைவசி கார்டு, ஐ.ஆர். கேமரா மற்றும் வெப் கேமராவுக்கு தின்க் ஷட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது.

லெனோவோ தின்க்ஸ்மார்ட் வியூ ஸ்மார்ட் டிஸ்ப்ளே விலை சர்வதேச சந்தையில் 349 அல்லது 449 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட தின்க்சென்ட்டர் எம்90ஏ ஏ.ஐ.ஒ. விலை 1,099 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 78,800) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News